குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - மீனம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - மீனம்

பொறுமையுடன் எதையும் நிதானமாக செய்யும் மீன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பெயர்ச்சிக்கு பின்பு நல்ல மாற்றம் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்து வருபவருக்கும். வெளிநாட்டு தொழில் செய்ய விரும்புவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். கடந்த காலத்தில் இருந்து வந்த பல தடைகள் நீங்கி, வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
 
விரைய சனி காலம் என்பதால் எந்த வரவு செலவுகளாக இருந்தாலும் இனி நேரடியாக உங்களின் பெயரில் செய்யாமல் வேறு நம்பிக்கையானவர்களின் பெயரில் செய்யவும். மனித நேயத்துடன் நடந்து கொண்டு பிறருக்கு உதவி செய்யும் உங்களின் பண்புகளால் பல தடைகள் உங்களை விட்டு விலகும்.
 
தோல்வி எதுவாக இருந்தாலும் அதனை படிப்பினையாக கொண்டு செயல்படுவது உங்களுக்கு மேன்மையைத் தரும். வெற்றி என்பது தானாக வராது என்றாலும் உங்களின் மன உறுதி உங்களை வளம் பெற செய்யும். முக்கியமான சில பிரமுகர்களின் சந்திப்பு உங்களுக்கு எதிர்கால நற்பலன்களை பெற்று தரும்.
 
பொது நல விடயங்களில் ஈடுபாடு குறைத்து கொண்டாலும் அது சார்ந்த சில காரியத்தை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டி வரும். குறிப்பாக கோவில் காரியங்களில் உங்களின் பங்களிப்பு நல்ல பயனுள்ளதாக அமையும். கலைத்துறையினருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இசைக்கலைஞர்களின் எதிர்பார்ப்பு சிறப்பாக அமையும்.
 
முக்கியமான சில காரியங்களில் கவனமுடன் செயல்பட்டு நன்மை அடைவீர்கள். சுப விரையமாக காலி மனை வாங்குவது, வீடு புதிதாக கட்டுவது. உங்களின் தேவையற்ற விரையத்தை குறைக்க பயன்படும். எத்தனை இடர் வந்த போதும் சிறிதும் கலங்காமல் எதையும் செயல்படுத்துவதில் திறமையுடன் நன்றாக செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும்.
 
பரிகாரம்:
 
சனிக்கிழமைகளில் வைரவருக்கு ராகு காலத்தில் ஐந்து நல்லெண்ணெய் தீபமிட்டு நீல நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள விரும்பியபடி சகல காரியமும் நன்மை உண்டாகும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554